யாழில் இருக்கும் காணிப்பிரச்சனைக்கு சிறந்த வளி அலுவலகங்கள் எல்லாம் மாங்குளத்திற்கு வருவது என்று வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்பாசன திணைக்களம் மாங்குளத்தில் 18.06.18 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் அவர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தியுள்ளார்

அவர் தனது உரையில்.
வடக்கில் மத்திய நிலையத்தினை நோக்கி சகலவிடயங்களும் நகர்த்தப்படவேண்டும் என்பது எங்களின் அவாவாக இருக்கின்றது.போர் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த நிலங்கள் பறிக்கப்படுவது முக்கிய காரணமாக இருந்தது இன்னிலையில்தான் வடக்கின் நிர்வாக அலகு மாகாணத்தின் மத்தியில் அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் இதற்கு முதன் முதலாக துணிகரமாக முன்னாள் விவசாய அமைச்சர் அவர்கள் இந்த கட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார். அவரின் முன் ஏற்பாட்டு செயற்பாடுதான் இது நடைபெறுகின்றது.

பல் மத்தியில் மாங்குள்தில் தண்ணீர் இல்லை என்று மனதில் வேரூன்றியுள்ளது இது தவறு மாங்குளத்திற்கு அருகில் கனகராய் ஆறு உள்ளிட்ட பல ஆறுகள் உள்ளன. எந்தவகையில் பார்தாலும் மிகப்பெரிய மூன்று குளத்தினை சூழவுள்ள பல நூற்றுக்கணக்கான சிறுகுளங்களை கொண்ட இடம்தான் மாங்குளம் மாங்குளத்தில் நீர் இல்லை என்பது ஒரு கபடத்தனமான விடயம் என்பதை தெரிவிக்கின்றேன்.

மணலாற்று பிரதேசத்தில் திட்டமிட்ட முறையில் அத்து மீறிய குடியேற்றங்களை குடியேற்றியுள்ளார்கள் மத்திய அரசு திட்டத்தினை போட்டு செயற்படுத்துக்கின்றார்கள் தமிழர்களின் மூளை பலம் என்பது ஸ்ரேலியர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு திறமையானவர்கள் என்று பல விடயங்களில் ஆராயப்பட்டுள்ளது. தமிழர்கள் தங்கள் மூளைவளத்தினை பயன்படுத்தித்தான் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு விடயத்தினையும் ஆக்கவேண்டியுள்ளது அதனால்தான் தமிழர்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

அண்மையில் தமிழ் பொறியிலாளர்கள் இலங்கையில் சேவை ஆற்றக்கூடியவர்கள் என்பது பல விருதுகள் மூலம் பறைசாற்றி இருக்கின்றார்கள் சகல மூளைவளத்தினை கொண்டவர்கள் இங்கு இருக்கின்றார்கள் அவர்களை கொண்டு தான் இனி நாங்கள் நகர்ந்து செல்லவேண்டும்.

இன்று நாங்கள் யாழ் குடாநாட்டினை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம் யாழ்ப்பாணம் பறிபோய்விடாது ஏன் என்றால் அங்கு யாரும் வரமாட்டார்கள் யாழ்குடாநாட்டினை போன்று இரண்;டு மடங்கு பெரிய பிரதேசத்தினை தான் மணலாற்றினை இழந்துகொண்டிருக்கின்றோம் வடக்கில் இருக்கின்ற அதிகாரிகள் நினைத்தால் மாங்குளத்தினை வளமாக்க முடியும் இதற்கான பிரச்சனை எங்களின் பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்ற பிரச்சனைதான் காணப்படுகின்றது பாடசாலை இருக்கின்றது ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றது.

எங்களுடை பிரதேசத்தில் இருக்கின்ற நீர்வளத்தினை நாங்கள் சேமிப்போமாக இருந்தால் மகாவலி நீர் எங்களுக்கு தேவையில்லை எங்கள் பிரதேசத்தினை வளமாக மகாவலி நீர் தேவையில்லை வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தனை நீரையும் எங்கள் பிரதேசத்தில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு கடலில் இருந்து நீரினை எடுத்து நன்னீர் ஆக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது இதில் எனக்கு ஈடுபாடில்லை இங்குள்ள ஆறுகளின் நீரினை கடலுக்குள் விடுகின்றோம் நல்ல நீரினை உப்பாக்கிவிட்டு உப்பு நீரினை நன்னீராக்கும் திட்டத்தினை நாங்கள் தேடுகின்றோம்

நாங்கள் எங்கள் பிரதேசங்களை வளமாக்க வேண்டும் என்றால் முதலில் எங்களுக்குள் இருக்கின்ற சிறு சிறு பிரச்சனைகளை விட்டுத்தள்ளவேண்டும்
வன்னியில் அதிகளவில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றார்கள்
கடந்த மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பதின்நான்காயிரம் குடும்பங்களுக்கு காணி இல்லை என்ற ஒருபிரேரணையினை கொண்டுவந்துள்ளார்கள் யாழ்ப்பாணத்தில் காணியினை உருவாக்கவேண்டும் என்று சொன்னால் கடலுக்குள் காடுவளர்க்கவேண்டும் அந்த பதின்னான்காயிரம் பேரையும் ஏனையமாவட்டத்தில் இருக்கின்ற பிரதேசங்களில் குடியேற்றக்கூடாது?

மாகாண சபையின் தலைமையலுவலகங்களை மாங்குளத்திற்கு கொண்டுவாருங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற காணிப்பிரச்சனை தானாக தீர்ந்துவிடும் என்று நான் சொல்லியுள்ளேன்.

இன்று தமிழர்கள் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது ஏன் அந்த பிரதேசங்களில் எங்கள் மக்கள் குடியேறக்கூhது ஏன் அதைபற்றி நாங்கள் சிந்திக்கக்கூடாது என்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்