தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது குண்டுவீசும் ரஷ்ய முசய்ஃபிரா விமானம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் தொடங்கிய 11 நாட்களில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.