விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வைபவம் 29.06.2018 அன்று காலை 9:30 மணியளவில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ .சகிலாபானு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட 50% ஆன அறவீட்டுத் தொகை மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை திட்டம் (2018) ஆகியவற்றின் கீழ் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் கௌரவ க .சிவநேசன் அவர்களும் வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ப .சத்தியலிங்கம் ,கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,கௌரவ ம .தியாகராஜா ,இ .இந்திராசா மற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கௌரவ த . யோகராஜா , பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு .நவநேசன் , ,பிரதி விவசாய விதைகள் உற்பத்தி பணிப்பாளர் திரு .ப .சத்தியமூர்த்தி ,மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் ,கமக்கார அமைப்புகள் ,ஊடகவியலாளர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.