Header image alt text

யாழில் இருக்கும் காணிப்பிரச்சனைக்கு சிறந்த வளி அலுவலகங்கள் எல்லாம் மாங்குளத்திற்கு வருவது என்று வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்பாசன திணைக்களம் மாங்குளத்தில் 18.06.18 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் அவர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தியுள்ளார்

அவர் தனது உரையில்.
வடக்கில் மத்திய நிலையத்தினை நோக்கி சகலவிடயங்களும் நகர்த்தப்படவேண்டும் என்பது எங்களின் அவாவாக இருக்கின்றது. Read more

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் போனோர் சங்கத்தின் தலைவிகள் சென்றுள்ளார்கள்.
இவர்கள் 20.06.18 அன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அமைந்துள்ள காணாமல் போனோர் அலுவலத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இவர்கள் எடுத்துரைக்கவுள்ளார்கள்.
ஜ.நா மனித உரிமை ஆணைக்கழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் யூன் 18 ஆம் திகதி தொடக்கி யூலை 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

துயர்பகிர்வு

Posted by plotenewseditor on 19 June 2018
Posted in செய்திகள் 


 

 

 

 

 

 

 

தோழர் சின்னைய்யா கமலபாஸ்கரன்

திருகோணாமலை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் லண்டனை வதிவிடமாகவும்
கொண்ட தோழர் கமலபாஸ்கரன் அவர்கள் இன்றையதினம் பிரித்தானியாவில் இன்று
(19.06.18) செ;வாய்க்கிழமை காலமானார் என்ற துயரச் செய்தியினை மிகுந்த
துயருடன் அறியத் தருகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த முன்னோடி தோழர்களில் ஒருவரும்
மருத்துவதுறை பணியாளருமான தோழர் கமலபாஸ்கரன் அவர்கள். தமிழீழ விடுதலை
புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக பிரித்தானியாவில் இருந்து செயலாற்றி
பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமரர் செயலதிபர்
உமாமகேஸ்வரன் தலைமையில்; 1980இல் தோற்றம் பெற்றபோது அவ் அமைப்பின்
முக்கிய செயற்பாட்டாளராக பிரித்தானியாவில் இருந்து செயலாற்றிய தோழர்களில்
முதன்மையானவர். செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்கள் மீதும்
கழகத்தின் மீதும் அளப்பரிய பற்றுதல் கொண்டிருந்த தோழர் கமலபாஸ்கரன்
ஆரம்பத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக ஜரோப்பாவில் இருந்து வட
அமெரிக்காவரையும் மேலும் பல நாடுகளுக்கும் பல ஆயிரம் மைல்கள் பயணித்து
கட்சி நடவடிக்கைளிற்காக உழைத்த ஒர் உண்மையான தோழர்,
இவர் தனது இறுதிமூச்சுவரை கழகத்தின் தோழனாக இருந்து ஈழத்தமிழின இனத்தின்
விடுதலையை நேசித்த தோழர். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கட்சியின் நிலை
குறித்து தோழர்களுடன் கருத்துக்களை பரிமாறி ஆலோசனைகளை வழங்கிய தோழர்,
தோழர் கமலபாஸ்கரன் அவர்களின் இழப்பு கட்சிக்கும் இனத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,
நண்பர்களுடன் நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.

 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி –DPLF
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE

புதிய அரசியலமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களில், ஒரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வை கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்த கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டு வருவாரே தவிர, தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார் என்று புளொட் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். Read more

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. Read more

மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. Read more

சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியே இந்த வரிவிதிப்புக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. 800 வகையான பொருள்களை குறிவைத்து செய்யப்பட்டுள்ள இந்த வரிவிதிப்பு ஜூலை 6 முதல் செயல்பாட்டுக்கு வரும். Read more

இலங்கை அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர்களாக ஐந்து பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் பொட்டளமாக கட்டி போடப்பட்டுள்ளது. Read more

வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.

இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு – தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனாலேயே இதில் நான் தலையிடுகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார். Read more