தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளை சார்பில், எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.30 க்கு சுவிஸ் சூரிச் மாநகரில் உள்ள Unter Affoltern மண்டபத்தில் (GZ Affoltern, Bodenacker -25, 8046 Affoltern Zürich) நடைபெறவுள்ள “29 வது வீரமக்கள் தினம்” நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராடடத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த “அனைவருக்குமான அஞ்சலி” நிகழ்வு இடம்பெறும். மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றினைத் தொடர்ந்து..,மாணவர்களின் விநோத உடைப் போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள், பட்டிமன்றம் (பட்டிமன்றம்.. “முகநூல் பதிவுகள் மற்றும் பகிர்வுகள் மக்களுக்கு பயனுள்ளதா? பாதிப்பானதா??”) விருந்தினர்கள் உரை, மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை அன்றையதினம் காலை 08.00 மணிக்கு, இதே மண்டபத்தில் நடைபெறவுள்ள “அறிவுத்திறன் போட்டியில்” இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் நேரில் வந்து தம்மை பதிவு செய்து விட்டு மேற்படிப்பு பரீடசையில் கலந்து கொள்ள முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.
சுவிஸ் வாழ் அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு.. ;
077.9485214, 078.9167111, 078.6461681,079.7333539, 079.9401982, 079.9297719, 079.2104566, 076.4454112,
இவ்வண்ணம்..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை.