மட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலை விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் இன்று ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
நேற்றைய தினம் 03.07.2018 மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கோவை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கையளித்துள்ளார்.குறித்த கோவையில் தண்ணீர் தொழிற்சாலையால் பொது மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்து குறித்தும் அதற்காக முறைகேடாக பெறப்பட்ட அனுமதிகள் குறித்தும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கையளித்து ஜனாதிபதியுடன் பேசி முடிவெடுப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தெரிவித்தார்.