சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை இன்றுமாலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பிவைத்ததாக விஜயகலா மஹேஸ்வரன் தெரிவித்துள்ளார். புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அக்கருத்து தொடர்பில் அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், அவர் தமது இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்தாக தெரிவித்துள்ளார்.