மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு லவ் லேனிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவிற்குள் இருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் விஷேட அதிரடிப்படையினர் அக்கைண்டுகள் இரண்டையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.