(ரொசான் நாகலிங்கம்)

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து தீர்மானிக்குமெனவும் அதுவரை இது தொடர்பில் பேசுவதை தவிர்க்குமாறும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ரெலோ மற்றும் புளொட் என்பன கோரியுள்ளன.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தமிழரசு கட்சியினர் பேசி வருவது, தீர்மானம் மேற்கொள்வது குறித்து கேட்டபோதே கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
த.சித்தார்த்தன்

மேற்படி விடயம் தொடர்பில் புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் இணைந்து முடிவு மேற்கொள்வதே ஆரோக்கியமானது. இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சி தீர்மானம் மேற்கொண்டு விட்டு மற்ற கட்சிகள்மீது திணிப்பது ஆரோக்கியமானதல்ல. செல்வம் அடைக்கலநாதன்
மேற்படி விடயம் தொடர்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுகையில்,

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எவரும் கருத்து கூறலாம். ஆனால் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் கூடியே யார் என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

கூட்டமைப்பை கூட்டி முடிவெடுத்து அறிவிக்கும் வரை கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். இது வீண் குழப்பத்துக்கு வழி வகுக்கும் என்பதால் தவிர்ப்பது ஆரோக்கியமானது என்றார். (நன்றி யாழ்.தினக்குரல் 06.07.2018)