வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வு வவுனியா மாவட்ட முன்னாள் அரச அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, புதிய அரச அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்தார்.