காணாமல் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளையுடன் 500வது தினத்தை எட்டவுள்ளது. இந்த போராட்டத்தின் 500வது நாளை முன்னிட்டு நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more