யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே, இந்த வெடிபொருட்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில், மீட்கப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் 744 கிராம் நிறைகொண்டவை என்றும் விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர். இதேவேளை, வெடிபொருட்களை வெடிக்கவைப்பதற்காக உதவும், சேவை நூல்கள், 3 டெட்டனேட்டர்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள், மேலதிக பரிசோதனைக்காக, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்படி வெடிபொருட்களையும், யுத்த உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.