இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள், யுத்த பாதிப்புக்குள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் கோகலே இந்திய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர் மேலும் பல முக்கிய சந்திப்புகளையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.