தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதன் (வசந்தன்) மற்றும் அவரது மகன் ச. வட்சலன், ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது வருட நினைவஞ்சலி நிகழ்வு இன்று (15.07.2018) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதன் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யபட்ட நினைவஞ்சலி நிகழ்வில் அமரர்களான ச.சண்முகநாதன் மற்றும் அவரது புதல்வரின் திருவுருவப் படத்திற்கு பிரமுகர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரின் ச.சண்முகநாதன் அவர்களின் மக்கள் சேவைகள் தொடர்பாகவும் அவரின் போராட்ட வாழ்வு பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டதுடன், அதிதிகளால் நினைவுப் பேருரைகளும் ஆற்றப்பட்டது. நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், வை.பாலச்சந்திரன், எஸ்.சிவநாதன் கிசோர், மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபை உபநகரபிதா வே. குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், எஸ்.காண்டிபன், பாலபிரசன்னா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.