தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், ’29 வது வீரமக்கள் தினம்’ நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.

மேற்படி ‘வீரமக்கள் தினம்’ நிகழ்வுகளாக ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மறைந்த அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், பொதுமக்களினால், ‘மக்களின் விடுதலைக்காக’ விதையாகிப் போன கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களுக்கான மலரஞ்சலி செலுத்தும் வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருமதி. ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் நெறியாள்கையில் பல்வேறு விதமான நாட்டிய நடனங்கள், திருமதி வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா அவர்களின் நெறியாள்கையில் பல்வேறு விதமான சங்கீத, கரோக்கி இசை நிகழ்வுகளும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுகள் அனைத்தையும் திருமதி. ஜெயவாணி குகராஜசர்மா தொகுத்தளிக்க அவருக்கு துணையாக திருமதி தவச்செல்வி கருணாகரனும் தோழர். ரஞ்சனும் தொகுத்தளித்தனர்.

அத்துடன், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட, ‘புளொட்’ தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்களின் பிரதம விருந்தினர் உரையுடன், சூரிச் தமிழ் சங்கம் சார்பில் திரு.இரத்னகுமார், தூண் வரசித்தி விநாசகர் ஆலய தர்மகர்த்தாவும், சமூக சேவகருமான திரு.சுப்பையா வடிவேலு, மற்றும் வர்த்தகரான ‘சுவிஸ் சுன்னாகம் சந்தை’ உரிமையாளரான திரு.மகாவேந்தன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றி இருந்தனர்.

அதேபோல் புளொட் அமைப்பின் பிரித்தானியக் கிளையின் வாழ்த்து செய்தியினை தோழர்.காந்தன் வாசித்தளிக்க, ஆரம்ப உரையினை திரு.இரத்னகுமாரும், வரவேற்புரையை தோழர்.சிவாவும், நன்றி உரையினையை தோழர்.ரஞ்சன் ஆகியோர் அளித்தனர்.

அதேவேளை அனறையதினம் காலை தோழர் சிவாவின் பொறுப்பில், திரு.செல்வராஜா மாஸ்ரர், திருமதி. புனிதா இரத்னகுமார், திருமதி.செல்வி ஜெகதீஸ்வரன், திருமதி.ராணி வர்ணகுமாரன், திருமதி.தவச்செல்வி கருணாகரன் (பிரபா), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், மற்றும் தோழர்.சிவா குடும்பத்தினர், தோழர்.பிரபா குடும்பத்தினரின் மேற்பார்வையில்

‘தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தால்’ நடைபெற்ற அறிவுத்திறன் போட்டி, சிறப்பாக நடைபெற்றதும், கலந்து கொண்ட மாணவர்களுக்கான மற்றும் கலைநிகழ்வு தந்து விழாவை சிறப்பித்த அனைவருக்குமான பரிசில்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்று விழா இனிதே நிறைவேறியது.

https://www.youtube.com/embed/ILkCDFfjk1c?wmode=transparent&rel=0&feature=oembed