புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வளாகத்தில் தோழர் திரு. ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தோழர்கள் மணியம், அஜித் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.