புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீரமக்கள் தினத்தின் 29ஆவது வீரமக்கள்தின இறுதிநாள் நிகழ்வு நேற்று (16.07.2018) திங்கட்கிழமை மாலை 4.30மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது.

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் உபதலைவர்களில் ஒருவரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மௌன அஞ்சலி, நினைவுச்சுடர் ஏற்றுதல் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more