அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவுடன் இலங்கை கடற்படையினர் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப் போர் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். ‘கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை’ என்ற பெயரில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையின் 4ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும் சிறப்பு படகு படையணி ஆகியவற்றை சேர்ந்த படையினர் இந்த இராணுவ கூட்டுப்போர் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையில் பயிற்சி மற்றும் தேவைப்பாடுகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உடன்பாடுகளுக்காக இவ்வாறான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இராணுவ கூட்டுப்போர் பயிற்சி எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.