பிரித்தானியாவின் வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் அவர், 7 கிழமைகள் பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்துக்கான முழுச் செலவான £ 100,000களை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது. இதன்மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பாராளுமன்றின் நிலையியற் குழு இதனை கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து ஐன் பைஸ்லி க்கு 2018 ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐன் பைஸ்லிக்கு வழங்கப்பட்டுள்ள 30 அமர்வுகளுக்கான தடை, கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.