யால தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, மத்தள தேசிய விமான நிலையத்துக்கு, உள்நாட்டு சேவைகளை பயன்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த குறித்த குழுவினர், இன்று பிற்பகல் 2 மணிக்கு, மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.