Header image alt text

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்ரின் பெர்னாண்டோ, அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளை தடுப்பதன் உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல. குற்றவாளிகளை கட்டுப்படுத்த முதலில் சட்ட நகர்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் (திருத்த) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலஞ்சம் (திருத்த) சட்டமூலத்தில் ஒரு சிறிய திருத்தும் மட்டுமே புதிதாக இடம்பெற்றுள்ளது, எனினும் இது மிகவும் முக்கியமான திருத்தமாகும். இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் இந்த ஊழல் குற்றங்கள் அனைத்துமே நீதவான் நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைக்கு எடுக்கப்படும். Read more

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவம் வீடமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடும் சுமார் 5 இலட்சம் ரூபா மதிப்பில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 1000 வீடுகள், யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தினரால் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி வழிகாட்டலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. Read more

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போலாந்து – உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது. Read more

முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தேனீ கொட்டியதில் 40-இற்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கல்லூரியின் கட்டடத்திலுள்ள தேன் கூடொன்று கலைந்ததில், இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் ஒருவர் உட்பட 42 மாணவர்கள் தேனீ கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 10 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

Read more