குற்றவாளிகளை தடுப்பதன் உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல. குற்றவாளிகளை கட்டுப்படுத்த முதலில் சட்ட நகர்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் (திருத்த) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலஞ்சம் (திருத்த) சட்டமூலத்தில் ஒரு சிறிய திருத்தும் மட்டுமே புதிதாக இடம்பெற்றுள்ளது, எனினும் இது மிகவும் முக்கியமான திருத்தமாகும். இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் இந்த ஊழல் குற்றங்கள் அனைத்துமே நீதவான் நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைக்கு எடுக்கப்படும். இதில் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் எல்லையும் உள்ளது. பாரதூரமான வழக்குகள் வந்தால் அதற்கு பொருத்தமான தண்டனை வழங்க வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் தான் மேல் நீதிமன்றத்தின் மூலமாக இதற்கான வழக்குகளை தொடர்ந்து செல்லலாம் என்ற யோசனை இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபால் ‘குற்றவாளிகளை தடுப்பதன் உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல. குற்றவாளிகளை கட்டுப்படுத்த முதலில் சட்ட நகர்வுகளை விசாரணைகளை, தேடுதல்களை பலப்படுத்த வேண்டும்’ நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனையை நிறைவேற்றவிலை. இது எமக்கு ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அல்ல.

நாம் இறக்க குணம் கொண்ட கருணை கொண்ட நாடு என்ற வகையில் மனிதாபிபானம் கொண்ட நாடக இதனை தடுத்துள்ளோம். சட்டம் சரியாக செயற்பட்டால், சரியான தண்டனை கிடைத்தால், பொலிஸ் பாதுகாப்பு படைகளின் கடமை சரியாக செயற்படும் என்றால் மரண தண்டனை அவசியம் இல்லை. ஆகவே அரசாங்கமாக நாம் அதனையே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.