Header image alt text

இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் வடமாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் மேற்படி அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும்பொருட்டு 55 நோயாளர் காவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென இந்திய மக்களால் இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. Read more

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருதி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில் நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் பிரதமர் அதற்கான சிட்டையையும் வழங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, Read more

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எந்த தடை வந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள், தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, நாளை நள்ளிரவு முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே, நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இருப்பினும், இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Read more

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள யொன்ஸி பல்கலைக்கழகத்தில் வைத்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுடன் அவர் இது குறித்து கலந்துரையாடியுள்ளார். உலக பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் கடப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.