நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள யொன்ஸி பல்கலைக்கழகத்தில் வைத்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுடன் அவர் இது குறித்து கலந்துரையாடியுள்ளார். உலக பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் கடப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.