02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.