சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எந்த தடை வந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூட்டமொன்று இடம்பெற உள்ளதாகவும், சட்டம், நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.