ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள், தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, நாளை நள்ளிரவு முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.