Header image alt text

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 250 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் 50 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

குறித்த 50 பட்டதாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள ஏனைய 200 பட்டதாரிகளையும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பாடசாலை மட்ட பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சிடம், கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வித் துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். Read more

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் உத்தேசம் இல்லை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். யாழப்ப்hணம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படுவதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தன. இவ்வாறு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றனவா என இராணுவத் தளபதியிடமும் வடக்குக்கு பொறுப்பான கட்டளைத் தளபதியிடமும் வடக்கு மாகாண முதலமைச்சரிடமும் வினவப்பட்டது. Read more

மன்னார் பழைய சதொச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்து, இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இருந்த கட்டடம் உடைக்கப்பட்டு அங்கிருந்த மண், மன்னார் எமில் நகர் பிரதேசத்திற்கு கொண்டுச் சென்று கொட்டப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மனித எலும்பு துண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. Read more