எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பாடசாலை மட்ட பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சிடம், கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வித் துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.எனவே குறித்த தினத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்துக்கொள்ளுமாறும், எனவே குறித்த தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சையை வேறொரு நாளுக்கு மாற்றுமாறும் கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.