இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 250 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் 50 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

குறித்த 50 பட்டதாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள ஏனைய 200 பட்டதாரிகளையும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவில் 250 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் முதலாம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நெவில் குருகே மேலும் தெரிவித்துள்ளார்.