Header image alt text

கறுப்பு யூலையின் 35ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. Read more

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். Read more

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன.

வாக்குமூலம் வழங்குவதற்காக நிறுவனங்களின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி, ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. Read more

மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக சந்தர்பத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நாளை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். செம்மணி நாயனர்மார்கட்டுப் பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஓர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன. இம் மனித எச்சங்கள் தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். Read more

‘தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டங்களின் வடிவம் மாறுமே தவிர போராட்டம் நிறுத்தப்படாது என அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தங்களுக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த அலுவலகம் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்த துணிகர கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில், கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டிருந்த போது, கண்ணிவெடியொன்று வெடித்தமையால், சர்வதேச அமைப்புக்குரிய இலங்கை ஊழியரொருவர் காயமடைந்துள்ளாரென, பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதென தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்த ஊழியர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

ஈரானிலிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும் எரிபொருட்களுக்குப் பதிலாக, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை பண்டமாற்று ரீதியில் ஏற்றுமதி செய்வது தொடர்பில், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான யோசனையை, இலங்கைத் தேயிலைச் சபை முன்வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தி வேலைத்திட்டங்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டுடன் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read more