‘தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டங்களின் வடிவம் மாறுமே தவிர போராட்டம் நிறுத்தப்படாது என அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தங்களுக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த அலுவலகம் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.