யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில், கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டிருந்த போது, கண்ணிவெடியொன்று வெடித்தமையால், சர்வதேச அமைப்புக்குரிய இலங்கை ஊழியரொருவர் காயமடைந்துள்ளாரென, பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதென தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்த ஊழியர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.