வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, அபிவிருத்தி திட்டங்களுக்கு என அறவீடுகள் செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவிருக்கும் தவணைப்பரீட்டையை பிற்போடுமாறு மாகாண பணிப்பாளர்களிடம் கோரியுள்ளதாக கல்வித்துறையை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கோரியுள்ளது. கல்வி சேவையில் அரசியல் பலிவாங்கல் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய முறையற்றவகையில் நியமனம் வழங்கப்படுகின்றமைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.