Header image alt text

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35ஆவது ஆண்டு நிறைவைக் நினைவுகூறும் தமிழர்களுடன் தானும் இணைந்துகொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். கறுப்பு ஜூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது. கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பொது வேட்பாளராக களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக போலி ஆவணங்களை வெளியிட்டதாக ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்கிய படகு ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அதிகாலை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டடனை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.

இந்த படகில் மொத்தமாக 33 ஏதிலிகள் பயணித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானார்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஏதிலிகளின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தவும், ஆட்கடத்தற்காரர்களை கைது செய்யவும், இலங்கை பாரிய ஒத்துழைப்பை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டார். Read more

விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று ஆற்றிய உரை தொடர்பாக விஜயகலா மகேஸ்வரனிடம் கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 4 மணிமுதல் சுமார் மூன்றரை மணித்தியாலயங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

கடந்த 2ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணி ஆரம்ப நிகழ்வில், உரையாற்றிய முன்னாள் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்பட உரையாற்றியிருந்தார். Read more

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூதூர் பொலிஸிற்கு முன்னால் உள்ள கடலில், கடல் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இளைஞனது சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். Read more

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சாவகச்சேரியில் இருந்து 13 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று, வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாளுக்கு சென்றுள்ளது. இதனை அறிந்த கொடிகாமம் பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் குறித்த வாள்வெட்டு குழு அங்கிருந்து தப்பி வடமராட்சி கிழக்கு பகுதிக்குள் சென்றுள்ளனர். Read more