யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சாவகச்சேரியில் இருந்து 13 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று, வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாளுக்கு சென்றுள்ளது. இதனை அறிந்த கொடிகாமம் பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் குறித்த வாள்வெட்டு குழு அங்கிருந்து தப்பி வடமராட்சி கிழக்கு பகுதிக்குள் சென்றுள்ளனர். இதனை அடுத்து கொடிகாமம் பொலிஸார், பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் பளை பொலிஸார் மேற்படி 13 இளைஞர்களையும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்த வாள்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பளை பொலிஸார் மீட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.