Header image alt text

புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் ஏற்பாட்டில் கடந்த 21.07.2018 சனிக்கிழமை அன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை ஆகுதியாக்கிய கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கிளைத்தலைவர் போல் சத்தியநேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பதவிகாலத்தினுள், ஊழல், மோசடிகள் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர தாம் எதிர்ப்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென தெரிவித்து அரசியல் சார்பான நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆசிரிய தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட முடியாது என ஊடகவியலாளர் ஒருவரால் கூறப்பட்ட கருத்துக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார். Read more

மாணவர்கள் கொழும்பில் இன்று முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மகாபொல புலமைப்பரிசிலை 1,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் விரிவுரையாளர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரியும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புஞ்சி பொரளை – கெம்பல் மைதானத்திலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பித்த எதிர்ப்பு ஊர்வலம், மருதானை ஊடாக புறக்கோட்டை வரை சென்று ஜனாதிபதி செயலகம் வரை பயணித்துள்ளது. இதனை நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் லோட்டஸ் வீதி மூடப்பட்டது. Read more

எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் சிரேஷ்ட அரச சட்டமா அதிபர் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்தினால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். Read more

ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்துச் செயற்படுத்துவதைத் தடுக்க, சுற்றாடல் அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கொண்ட முயற்சியைக் கண்டிப்பதாக, ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையஅமைச்சர் எனக் குற்றஞ்சாட்டி, அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கைத் தனியார் வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்பாக்கியிருந்தது. இந்நிலையில், குறித்த செய்தியை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமென, வானொலியின் ஆசிரிய பீடத்துக்கு, அமைச்சர் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, அந்த கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more

காங்கேசன்துறை மற்றும் கல்முனை பகுதிகளில் இருந்து கடந்த மாதத்தில் கடலுக்கு சென்று காணாமல்போயுள்ள மீன்பிடிப் படகுகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் வைத்தே காணாமல்போயுள்ள குறித்த இரண்டு படகுகளிலும் 5 மீனவர்கள் பயணித்துள்ளனர். இந்த படகுகளை கண்டுபிடித்து தருமாறு மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார். Read more

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 4,000 பட்டதாரிகளை பொதுச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நேற்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 4,000 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திடடத்தின் ஒரு பகுதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது இதன் நோக்கமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. Read more