காங்கேசன்துறை மற்றும் கல்முனை பகுதிகளில் இருந்து கடந்த மாதத்தில் கடலுக்கு சென்று காணாமல்போயுள்ள மீன்பிடிப் படகுகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் வைத்தே காணாமல்போயுள்ள குறித்த இரண்டு படகுகளிலும் 5 மீனவர்கள் பயணித்துள்ளனர். இந்த படகுகளை கண்டுபிடித்து தருமாறு மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார். ஒரு நாள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது அனர்த்தத்துக்கு உள்ளாகும் மீனவர்களின் இருப்பிடத்தை கண்டறிவதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.