போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட முடியாது என ஊடகவியலாளர் ஒருவரால் கூறப்பட்ட கருத்துக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட முடியாது என்பதும் உண்மைதான் என அவர் சுட்டிக்காட்டினார்.