காணாமல் போனோர் அலுவலகம் விடயத்தில், பொதுமக்கள் தங்களது சுயமான நிலைப்பாட்டை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான செயலகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய 5 பொறிமுறைகளில் ஒன்றான காணாமல் போனோர் அலுவலகம் தற்போது தமது செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் இந்த அலுவலகம் கருத்துப்பதிவை மேற்கொண்ட போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது கருத்துக்களை குறித்த அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சிகளும், தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பொதுமக்களை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.