Header image alt text

பலாலி விமானத்தள காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, இதற்கான காணி கையகப்படுத்தல் தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினாலேயே முதலமைச்சரினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவை திணைக்களத்தினால் 141.61 ஹெக்டெயர் காணி முதலில் கையேற்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more

வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோரினால் தான் இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஏழ்மையான மக்கள் வெளிநாடுகளுக்ககு சென்று ஈட்டும் வருமானத்தில் தான் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பயணிக்கிறது. இந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள தமது உறவினருக்கு ஏதாவது நடைபெற்றால், அது குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்றுகூட நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. Read more

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் இருவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகழும் பணிகள் இன்று 41வது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகளையும் அகழ்வு பணிகளையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்களான, கணபதிப்பிள்ளை வேந்தன், ரகீம் மிராக் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். Read more

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகளும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் தாழ்வுப் பகுதிகள் 2018 ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து 2018 ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக (குறிப்பாக உயரமான அலைகளின் பொழுது) அலைகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். Read more

காணாமல் போனோர் அலுவலகம் விடயத்தில், பொதுமக்கள் தங்களது சுயமான நிலைப்பாட்டை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான செயலகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய 5 பொறிமுறைகளில் ஒன்றான காணாமல் போனோர் அலுவலகம் தற்போது தமது செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் இந்த அலுவலகம் கருத்துப்பதிவை மேற்கொண்ட போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள். Read more

கொழும்பு மாநகர சபையின் பொது நூலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி புத்தகக் கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் குறித்த கண்காட்சி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பொது நூலக நலன்புரி சங்கம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது. நேற்று ஆரம்பமாகிய இக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.