கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நியமனத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 5 வருடங்களை பூர்த்தி செய்த ஏனையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும், இவ்வாறு 1507 பேருக்கு கிளிநொச்சியில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் கூறப்படடுள்ளது.