வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளனர். இதன் போதே மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.