புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேரிடம் இவ்வாறு வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள விஜயகலா மகேஸ்வரனில் இல்லத்தில் வைத்து சுமார் மூன்றரை மணி நேரம், விஜயகலாவிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு நேற்று முன்தினம் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர்.