டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடந்த மே மாதம் 25ம் திகதி டுபாயில் நகர நிறுவனம் ஒன்றில் இருந்து இந்த மாணிக்கக்கல் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நூற்றுக்கணக்கான விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், பல சி.சி.டி.வி காணொளிகளும் பார்வையிடப்பட்டு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் இந்த கல் எவ்வாறு இலங்கையில் இருந்து மீட்கப்பட்டது என்பது குறித்த விபரங்களை காவற்துறையினர் வெளியிடவில்லை.