பாதுகாப்பு அமைச்சின், 2017ம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையின் பிரகாரம், முப்படையினரும் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்படி 4 ஆயிரத்து 318 ஏக்கர் அரச காணிகளும், 842 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரத்து 811.34 ஏக்கர் வடக்கிற்கும், 349.25 ஏக்கர் காணிகள் கிழக்கிற்கும் உரியன. அதேநேரம் இந்த ஆண்டு மேலும் 54.29 ஏக்கர் காணிகள் வடக்கிலும் கிழக்கிலும் விடுவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.