இந்தியாவின் அந்தமான் தீவில் வசிக்கும் 48 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் ஏதிலிகளாக அந்தமான் – நிக்கோபர் தீவில் குடியேறினர். அப்போது அவர்களுக்கான வாழ்வாதாரத்தின் பொருட்டு இரண்டு ஹெக்டேயர் காணி வழங்கப்பட்டது. அத்துடன், கடந்த 1976ம் ஆண்டில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து, அந்தமானில் உள்ளரூnடிளி; தீவொன்றில் தஞ்சம் அடைந்த 48 தமிழ் குடும்பங்களுக்கு அரை ஹெக்டேயர் காணி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்களுக்கு ஒன்றரை ஹெக்டேயர் காணி ஒதுக்கீடு செய்யப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அந்த குடும்பங்கள் அங்கு வந்து குடியேறி 42 வருடங்கள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், குறித்த 48 குடும்பங்களுக்கு ஒன்றரை ஹெக்டேயர் காணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.