கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்