கெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக இந்த தீ இருந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.