சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது.

அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆகஸ்ட் 30-க்குள் சரணடைய வேண்டும் என்றும் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மலேசிய அரசு எச்சரித்துள்ளது. தானாக முன்வந்து சரணடையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.